உலகம்

"ரஷ்ய அதிபர் புதினை எதிர்க்கும் நபர் தற்போதைய சூழலில் யாரும் இல்லை" - எலான் மஸ்க் கருத்து !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தொடவுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. மேலும், மேற்கத்திய நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் போரில் இருந்து அதன் அதிபர் புதின் பின்வாங்கினால் அவர் படுகொலை செய்யப்படுவார் என எலான் மஸ்க் கூறியுள்ளார். சர்வதேச விவகாரங்கள் குறித்து அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்எக்ஸ் ஸ்பேசஸ் தளம் மூலம் விவாதித்தார்.

அப்போது பேசிய அவர், "உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலர் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த உதவி உக்ரைனுக்கு பலனளிக்காது. ஒருவேளை போரில் இருந்து ரஷ்ய அதிபர் புதின் பின்வாங்கினால் படுகொலை செய்யப்படுவார். புதினை ஆட்சிக் கட்டிலிருந்து இறக்க முயல்வதுதான் புத்திசாலித்தனம்.

ஆனால் அதற்கு முன்னர் அங்கு அப்படி பட்ட நபர் இருக்கிறாரா என்பதையும் பார்க்கவேண்டும். தற்போதைய சூழலில் அநேகமாக இப்படியானவர் யாரும் இல்லை. புதினுக்கு மாற்றாக ஒருவரைக் கொண்டு வந்தாலும், அவர் புதினைவிடக் கூடுதல் வேகம் கொண்டவராகத்தான் இருப்பார்" என்று கூறியுள்ளார்.

Also Read: “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசத்தை வீழ்த்தும்”: உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்