உலகம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் : சிறையில் இருந்தபடி வெற்றியை நோக்கி இம்ரான் கான்... விவரம் என்ன ?
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2922-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது
இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டது. மேலும், அவரின் கட்சியும் தேர்தலில் நிற்கமுடியாது நிலை ஏற்பட்டது.
இதனிடையே நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்கு நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குப்பதிவுகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், அதில் இம்ரான் கானின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சைகள் 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர், என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே போல அவரின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 101 நாடாளுமன்றத் தொகுதிகளில் 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்று அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!