உலகம்
இஸ்ரேலுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க மறுத்த சர்வதேச நீதிமன்றம் : பின்னணி என்ன ?
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 25 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதனிடையே காஸா மக்களைக் இஸ்ரேல் அரசு கொன்று குவித்ததாக தென்னாபிரிக்க அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், போர்நிறுத்த உத்தரவை பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "பாலஸ்தீனத்தில் நிலவும் சூழல் மோசமாக இருக்கிறது. அங்கு ஏற்படும் உயிரிழப்புகள் கவலையை ஏற்படுத்துகிறது. அங்கு தனது வீரர்கள் இனப்படுகொலையில் ஈடுபடாமல் இருப்பதை இஸ்ரேல் அரசு உறுதி செய்ய வேண்டும். காசா பகுதியில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி, இது குறித்த அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது .
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?