உலகம்

"இடதுசாரி BRICS கூட்டணியில் இணையமாட்டோம்" - அர்ஜெண்டினாவின் புதிய அரசின் அறிவிப்பால் பரபரப்பு !

பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.2010ம் ஆண்டு முதல் இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநாடு ஆன்லைன் வழியாக மட்டுமே நடந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி மாநாடாக இந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளிடையேஉள்ள சுமுக உறவு மற்றும் பொருளாதார வர்த்த உடன்பாடுகள் குறித்து விவாதிக்கபட்டது. மேலும் பிரிக்ஸ் கூட்டமையில் பிற நாடுகள் இணையும் நீண்ட நாள் கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது.

இந்த அமைப்பில் இணைவதற்கு 23 நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணம் அளித்த நிலையில், அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஈரான் ஆகிய 6 நாடுகளை புதியதாக பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அர்ஜெண்டினா பிரதமர் ஜேவியர் மிலேய், பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் அனுப்பிய கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி கட்சியான லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து பிரதமராக ஜேவியர் மிலேய் நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்தே பிரிக்ஸ் கூட்டணியில் சேர்வதில்லை என்ற முடிவை அந்நாட்டின் வலதுசாரி அரசு எடுத்துள்ளது. பிரிக்ஸ் கூட்டணியை இடதுசாரி கூட்டணி என விமர்சித்து அதில் சேர்வதில்லை என ஜேவியர் மிலேய் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இஸ்ரேலுக்கு 147.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் கருவிகள் விற்பனை - அமெரிக்கா அறிவிப்பு !