உலகம்

மீன்பிடி கப்பல்களை தண்ணீர் பீச்சு அடித்து விரட்டிய சீனா: தென் சீனக் கடலில் பரபரப்பு.. அமெரிக்கா கண்டனம் !

பசுபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென் சீன கடல் உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் முக்கிய மையமாக திகழ்கிறது. இந்த கடல் பகுதியில் ஏராளமான சிறிய அளவிலான தீவுகளை அமைந்துள்ளதால் அந்த தீவுகளை பல்வேறு நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன.

தென் சீனக் கடலைச் சுற்றிலும், மக்காவு, சீன மக்கள் குடியரசு, தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருணை, இந்தோனேசியா, சிங்கப்பூர், மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலான தீவுகளை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தென் சீன கடலில் மீன் பிடித்த படகுகள் மீது சீன கடலோரக் காவல் படை தண்ணீரைப் பாய்ச்சியடித்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் சீன கடலின் சில பகுதிகளை சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகிறது. இங்கு வழக்கம் போல பிலிப்பைன்ஸ் நாட்டு மீன்பிடி படகுகளில் அந்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்து வந்துள்ளனர். அப்போது அங்கு சீன கடலோரக் காவல் படையினர் வந்துள்ளனர்.

அப்படி வந்தவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டு மீன்பிடி படகுகளில் தண்ணீரைப் பீச்சியடித்து பிலிப்பின்ஸ் மீன்பிடிக் கப்பல்களை விரட்டியடித்துள்ளனர். இது குறித்த வீடியோகள் வெளியான நிலையில், சீனாவின் இந்தச் செயல் மிகவும் ஆபத்தானது என பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Also Read: இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு !