உலகம்
"பிணைக் கைதிகளை விடுவிக்கிறோம் என்றோம், ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை" - ஹமாஸ் அமைப்பு குற்றச்சாட்டு !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கத்தார் நாட்டின் தலையீட்டின் பேரில் 4 நாட்கள் போர் நிறுத்த அறிவிப்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சார்பில் வெளியிடப்பட்டது. இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெண்கள் போன்ற பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்றும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனர்களை விடுவிப்பதாக இஸ்ரேலும் ஒப்புக்கொண்டனர்.
முதலில் 4 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பின்னர் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டதுஅதனைத் தொடர்ந்து இந்த காலகட்டத்தில், ஹமாஸ் 105 பிணையக் கைதிகளையும், இஸ்ரேல் 240 பாலஸ்தீன கைதிகளையும் விடுவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று காலை காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.
இந்த நிலையில், பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிப்பதாக கூறியும் அதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவிக்கவில்லை என ஹமாஸ் அமைப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஹமாஸ் தரப்பில் வெளியான செய்தியில், போர் நிறுத்தத்தை தொடர் பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிப்பதாகவும், காசாவில் இறந்துபோன இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தாங்கள் முன்வந்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
வயதானவர்களையும், போரில் இறந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் விடுவிக்கிறோம் என தெரிவித்தோம். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதி யார்டன் பிபாஸின் மனைவி, இரு சிறு குழந்தைகளின் சடலங்களையும், பிபாஸையும் விடுவிக்கிறோம் என்றும் கூறினோம். ஆனால் அவர்கள் திடீரென தாக்குதலைத் தொடங்கிவிட்டனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!