உலகம்

அடுத்தடுத்து 1000 நிலநடுக்கங்கள் : 1 கி.மீ ஆழத்தில் எரிமலை குழம்பு.. மிகப்பெரும் ஆபத்தில் ஐஸ்லாந்து நகரம்

மேற்கு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இதனால் இங்கு அடிக்கடி எரிமலை வெடித்து அதனால் மேற்கு ஐரோப்பா முழுவதுமே பாதிக்கப்படும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் அங்கு புதிய எரிமலை வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கிரண்டாவிக் என்ற சிறிய நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரில் சுமார் 3 ஆயிரம் மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த நகரத்தின் அருகே கடந்த வாரம் திடீரென ஒரு பெரும்பள்ளம் ஏற்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில், 3.9 மற்றும் 4.5 ரிக்டரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதோடு நிற்காமல் 1000க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான நிலநடுக்ககள் ஏற்பட்டன. இதனால் அந்த பகுதியில் ஆய்வாளர்கள் சோதனையை தீவிரப்படுத்தினர்.

அந்த சோதனையில், அந்த சிறிய நகரின் அருகே வெகுவிரைவில் எரிமலை வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. அந்த பகுதியில், மாக்மா (magma) எனப்படும் நெருப்பு குழம்பு குவிந்து வருவதாகவும், இது போன்ற நிலையில் அதன் அழுத்தம் அதிகரித்து எரிமலையாக வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் அந்த எரிமலை குளம்புகள் பூமிக்கு கீழே 1 கிலோமீட்டருக்குள் இருப்பதால் இதன் ஆபத்து அதிகளவில் இருப்பதாகவும், இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துவருவதாவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: "அந்த புகைப்படத்தில் எதுவுமே இல்லை, அவ்வளவுதான்"- உலககோப்பையில் கால் வைத்தது குறித்து ஆஸ்.வீரர் கருத்து !