உலகம்

மேலும் ஒரு உக்ரைனிய நகரத்துக்கு குறி : ரஷ்யாவிடம் வடக்கு உக்ரைனிய பகுதியை இழக்கிறதா நேட்டோ நாடுகள் ?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

இந்த போரில் வடக்கு உக்ரைனின் ஏராளமான நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன. டொன்பஸ் பிராந்தியம் முழுவதும் ரஷ்யாவிடம் வீழ்ந்த நிலையில், கெர்சன், பாக்முத் ஆகிய நகரங்களை ரஷ்ய படைகள் பல மாதமாக முற்றுகையிட்டுள்ளது. எனினும் இந்த போரானது கடந்த சில வாரங்களாக தேக்கநிலையை அடைந்தது.

இதன் காரணமாக உக்ரைன் - ரஷ்யா போர் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வார தொடக்கத்தில் ரஷ்யா தனது தாக்குதல் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே கெர்சன், பாக்முத் ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை அதிகப்படுத்திய நிலையில். தற்போது மற்றொரு நகரத்தையும் ரஷ்யா இலக்காகியுள்ளது.

அதன்படி, கிழக்கு உக்ரேனிய நகரமான அவ்திவ்காவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகின்றது. ராணுவமுக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரை ரஷ்யா கைப்பற்றினால் வடக்கு உக்ரைனின் கட்டுப்பாட்டினை முழுவதுமாக உக்ரைன் இழக்கும் என போர் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.