உலகம்
பாலஸ்தீன் மீதான தாக்குதல்: இஸ்ரேலில் செல்வாக்கை இழக்கும் ஆளும் வலதுசாரி கட்சி - நெதன்யாகுவுக்கு சிக்கல் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் ஆளும் கட்சியான லிகுத் கட்சியின் செல்வாக்கு பெரிய அளவில் சரிந்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து, ஹீப்ரு செய்தி நிறுவனமான Maariv வெளியிட்ட கருத்துக் கணிப்பில், இஸ்ரேலில் இப்போது தேர்தல் நடந்தால் ஆளும் 'லிகுத்' கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 120 இடங்களில் வெறும் 41 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'தேசிய ஒற்றுமைக் கூட்டணி' 79 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்னும் கருத்து கணிப்பில் தகவல். மேலும், பாலஸ்தீன் மீதான தாக்குதல் காரணமாக இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவின் செல்வாக்கு 27% என்ற அளவில் கடுமையாக சரிவை சந்தித்துள்ளதாகவும், பிரதமர் பதவிக்கு 52% பேர் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமைக் கட்சியின் கூட்டணியின் தலைவர் காண்ட்ஸ் என்பவரே பிரதம பதவிக்கு பொருத்தமானவர் என்றும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!