உலகம்
காலையிலேயே வாக்கிங் சென்ற CEO.. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. பேருதவியாக இருந்த Smart Watch - நடந்தது என்ன?
தற்போதுள்ள காலத்தில் பலவை நவீனமயமாக மாறிவிட்டது. பலரும் தற்போது ஸ்மார்ட் வாட்சுகளை அணிகின்றனர். இந்த ஸ்மார்ட் வாட்சுகளில் நமது உடல் சார்ந்த தண்ணீர் அளவு, பிபி, ஆக்சிஜன் அளவு, எவ்வளவு மணி நேரம் நடந்தது என்ற குறித்த விஷயங்களும் இடம்பெற்றிருக்கும். அதோடு சில வாட்சுகளில் மொபைலில் வருபவர்களின் நோட்டிபிகேஷன் வரும்.
இன்னும் விலையுயர்ந்த வாட்சுகள் மூலம், நாம் யாருக்கு வேண்டுமானாலும் போன் பேச முடியும். போன் வந்தால் அதனை எடுக்கவும் முடியும். இது போன்ற வாட்சுகள் பெரும்பாலும் பலருக்கும் உபயோகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது ஒருவரது உயிரையே இது காப்பாற்றியுள்ள நிகழ்வு நடந்துள்ளது.
இங்கிலாந்தின் மோரிஸ்டனில் அமைந்துள்ளது ஸ்வான்சியா. இங்கு பால் வாபம் (Paul Wapham) என்ற 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவர் ஹாக்கி வேல்ஸ் எனும் நிறுவனத்தின் CEO-வாக இருந்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு காலையில் தினமும் வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்துள்ளது.
அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் இவர் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது இவருக்கு திடீரென இலேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மூச்சு விடவே சிரமப்பட்டுள்ள அவர், சம்பவ இடத்திலேயே சட்டென்று சரிந்துள்ளார். அந்த நேரத்தில் அவர் உதவிக்கு யாரையும் சத்தமாக அழைக்க முடியவில்லை.
இந்த சூழலில் தான் அவருக்கு தான் கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் கை கொடுத்தது. தனது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் தனது மனைவி லாராவுக்கு போன் செய்துள்ளார். இதனை கேட்டு பதறியடித்த அவரது மனைவி உடனடியாக உதவிக்கு ஆட்களையும் அழைத்து விரைந்து வந்து தனது கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கே அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பரிசோதனை செய்ததில், அவரது இதயத்தின் இரத்த குழாயில் அடைப்பு இருப்பதால் மாரடைப்பு ஏற்பட்ட தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தற்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் வாட்ச் கட்டியிருந்தால்தான் தனது மனைவியை அழைக்க முடிந்தது என்றும், அல்லது தனது நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று தெரியாது என்றும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட சி.இ.ஓ கண்கலங்க தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!