உலகம்

காலில் அதிக கொழுப்பு.. அறுவை சிகிச்சை செய்தபோது 4 முறை மாரடைப்பு.. பிரபல இளம் பெண் Influencer பரிதாப பலி!

அண்மைக்காலமாக இளைஞர்கள், சிறுவர்கள் என பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் கூட சிறுவர்கள் நடனமாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் செய்திகள் வெளியாகிறது. மேலும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும்போது, கிரிக்கெட் விளையாடும்போது என பலரும் உயிரிழக்கின்றனர். இப்படி தொடர்ந்து கடந்த சில மாத காலமாக இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த சூழலில் தற்போது அறுவை செய்துக்கொண்டிருக்கும்போது 4 முறை மாரடைப்பு பிரேசிலை சேர்ந்த பிரபல இளம் பெண் Influencer உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்தவர் லுவானா ஆண்ட்ரேட் (Luana Andrade). 29 வயது இளம்பெண்ணான இவர், பிரபல Influencer ஆக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இவருக்கு கால் முட்டி பகுதியில் கொழுப்பு நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற எண்ணியுள்ளார். அதன்படி சாவ் பவ்லோ (Sao Paulo) என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சிகிச்சை செய்துகொண்டிருந்த சமயத்தில் லுவானாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்கு அதற்காக முதலுதவி செய்தனர். பின்னர் தொடர்ந்து அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை தொடங்கியது. அப்போதும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறுவை சிகிச்சையின்போது சுமார் 4 முறை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திவிட்டு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்படி இருந்தும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து உயிரிழந்த லுவானா ஆண்ட்ரேடுக்கு Neymar உள்ளிட்ட பிரபலங்கள், ரசிகர்கள் மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது காதலன், அவரது புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமாக பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

லுவானா ஆண்ட்ரேட்டின் மறைவு குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் லுவானா ஆண்ட்ரேட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே பரிசோதனை மேற்கொண்டப்படாது, அவருக்கு இரத்த உறைவு (BLOOD CLOT) இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் ICU க்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்கவில்லை." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்டிருக்கும்போது 4 முறை மாரடைப்பு பிரபல இளம் பெண் Influencer உயிரிழந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆதார் - பான் இணைப்பு : 11.5 கோடி பான் கார்டுகள் செயலிழப்பு.. RTI மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி!