உலகம்
நிலநடுக்கத்தால் உருகுலைந்த நேபாளம் : கட்டட இடிபாடுகளில் சிக்கி 128 பேர் உயிரிழப்பு!
நேபாளம் தலைநகர் காத்மாண்டில் இருந்து 250 மைல் தூரத்தில் இருக்கும் ஜாஜர்கோட் என்ற பகுதியில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நாடு முழுவதும் உணரப்பட்டுள்ளது.
மேலும் கட்டங்கள் இடித்து விழுந்துள்ளது. இரவு நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுவரை 128 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் முதற்கட்டமாக 5.6 ரிக்டர் அளவில் பதிவானது. பிறகு 11 மைல் ஆழத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 நாட்களில் மட்டும் நேபாளத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் டெல்லி, நொய்டா, பாட்னா, பீகார் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!