உலகம்
காசா மீதான போரை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் : ஐ.நா-வில் நிறைவேறிய தீர்மானம் - புறக்கணித்த இந்தியா !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த வாரம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் காசாவுக்கு செல்லும் குடிநீர், உணவுப்பொருள்கள், மருத்துவ பொருள்கள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் அரசு தடுத்து வைத்துள்ளது. மேலும் காசாவில் தரைவழி தாக்குதலுக்கும் இஸ்ரேல் அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஐ.நா சபையின் அவசரக்கால சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. இந்தப் கூட்டத்தில் ஜோர்டான் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்தில், காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், காசா மக்களுக்குத் தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில், 120 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. அதே நேரம், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, உக்ரைன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அதிக ஆதரவு இருந்த காரணத்தால் இந்த தீர்மானம் ஐ.நா அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?