உலகம்

சவூதி அரேபியா சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் மக்கள்.. பொருளாதார நெருக்கடி காரணமாக நேரும் அவல நிலை !

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக உலகவங்கி, ஐஎம்எப் ஆகிய நிறுவனங்களிடம் கையேந்தி வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாக உலக வங்கி சவூதி அரேபியாஅதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த நிலை காரணமாக அங்கிருக்கும் பலர் சவூதி அரேபியா சென்று பிச்சை எடுத்து வரும் அவலநிலை தற்போது வெளிவந்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு ஹஜ் புனித பயணம் செல்லும் சில பாகிஸ்தானியர்கள் அங்கு பிச்சை எடுத்து வருவதாகவும், அங்கு சிறு திருட்டு வேளைகளில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், பாகிஸ்தான் முல்தான் நகரில் இருந்து ஹஜ் புனித பயணத்துக்கான விசாவை பயன்படுத்தி சவூதி சென்று அங்கு பிச்சை எடுக்க முயன்ற 11 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இதனிடையே இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்கள் துறைச் செயலா் ஜிஷான் கான்ஷாதா, புனிதப் பயணத்துக்கான "விசா பெற்று சவுதி செல்லும் பாகிஸ்தானியர்கள் அங்கு யாசகம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். மேலும், அங்கு சிறிய அளவிலான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவா்களில் பெரும்பாலானவா்கள் பாகிஸ்தானைச் சோந்தவா்களாகவே உள்ளனா் என அந்நாட்டு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. வெளியான 2 கருத்து கணிப்பு முடிவுகள்.. அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!