உலகம்
மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் வாக்னர் படை.. புதின் உத்தரவால் அதிர்ச்சியில் நேட்டோ நாடுகள் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த போரில் ரஷ்யா சார்பில் வாக்னா் என்ற தனியார் ராணுவம் பங்கேற்று உக்ரைனின் முக்கிய பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தது. இந்த சூழலில் வாக்னா் படைக்கும் ரஷ்யாக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீதே படையெடுப்பதாக வாக்னா் படையின் தலைவர் ப்ரீகோஜின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வாக்னா் படைகள் மாஸ்கோ நோக்கி முன்னேறின. எனினும் ரஷ்யாவின் நட்புநாடான பெலாரஸ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு வாக்னா் படைகளும் அதன் தலைவர் ப்ரீகோஜினும் மாஸ்கோ நோக்கிய முன்னேற்றத்தை நிறுத்தி பெலாரஸ் நாட்டுக்கு சென்றனர்.
இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்னா் படைகளின் தலைவர் ப்ரீகோஜின் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனை ரஷ்யாவும் உறுதிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வாக்னர் படைகள் ரஷ்ய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென ரஷ்யா உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஷ்ய அரசுக்காக வாக்னர் உள்ளிட்ட தனியார் படைகளை வழிநடத்த வாக்னர் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் விளாதிமீா் புதின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து ரஷ்யா அதிபா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் உள்ள தனியார், தன்னார்வ படைகளை வழிநடத்த அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு ரஷ்ய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
வாக்னர் படைகள் உக்ரைன் தவிர சிரியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இடங்களில் இருக்கும் நிலையில், அதன் தலைவர் ப்ரீகோஜினின் மரணத்துக்கு பின்னர் அந்த படை வீரர்கள் கலைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் தற்போது இந்த செயல்பாட்டின் மூலம் மீண்டும் அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!