உலகம்

மகளின் பிறந்தநாள்: பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. கணவர் இறப்பு.. கூகுள் மீது வழக்கு தொடுத்த மனைவி.. காரணம்?

அன்றாட வாழ்வில் அனைத்தும் இணையமையமாகிவிட்டது. இதனால் நாம் சில விஷயங்களை எளிதாக கையாள முடிகிறது. அதில் ஒன்று தான் கூகுள். கூகுள் நிறுவனத்தில் ஒரு படைப்பு தான் கூகுள் மேப். இதன் மூலம் நாம் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் எளிதில் செல்ல இயலும். ஆனால் சில நேரங்களில் இது காட்டும் வேலை மிகவும் கடினமாக இருக்கும்.

வெளிநாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த சில பயணிகள் தவறான இடத்திற்கு, விபத்திற்கு, பள்ளத்தில், குளத்தில் என தங்கள் காரை இயக்கியுள்ளனர். இந்த நிகழ்வு ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது கூகுள் மேப் பார்த்து வாலிபர் ஒருவர் காரை ஓட்டி சென்றபோது, பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அந்த வாழில்பார் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வருபவர் ஃப்லிப் பேக்சோன் (47) - அலிசியா தம்பதி. இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ம் தேதி இவர்களது மூத்த மகளுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதனால் தனது இடத்தில் இருந்து ஃப்லிப் பேக்சோன், வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அந்த நேரம் இரவு மட்டுமல்லாமல் மழையும் பெய்துகொண்டிருந்தது. இதனால் அவர் கூகுள் மேப் உதவியோடு சென்றுள்ளார். அந்த சமயத்தில் கூகுள் மேப் தவறான பாதையை காட்டவே, அது காட்டிய இடத்துக்கு காரை இயக்கிய அந்த நபர், ஹிக்கேரி என்ற இடத்திற்கு அருகே இருக்கும் பழுதடைந்த பாலத்தில் இருந்து, 20 அடி ஆழ பள்ளத்தில் காருடன் விழுந்துள்ளார்.

இந்த கோர விபத்தில் பேக்சோன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் இந்த விவகாரம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அவரது உடல் மீட்கப்பட்டு, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த பாலம் 2013-ம் ஆண்டே பழுதடைந்து விட்டது என்றும், தற்போது வரை அது பராமரிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

மேலும் பழுதடைந்த பாலத்தில் எந்த வித தடுப்போ, எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, அது ஒரு ஆபத்தான பகுதி என்று தெரியாமல் கூகுள் மேப் உதவியோடு அந்த நபர் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தற்போது 1 ஆண்டு ஆகவுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் மனைவி அலிசியா, இந்த சம்பவம் தொடர்பாக கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கனடா -இந்தியா மோதல்.. அமெரிக்காவின் ஆதரவு யாருக்கு? - பென்டகனின் முன்னாள் அதிகாரி பதில் !