உலகம்

Freezer-ல் வைக்கப்பட்ட 60 வயது மூதாட்டி சடலம்.. கணவர் செய்த செயலை கேட்டு அதிர்ந்த நீதிபதி.. என்ன நடந்தது?

இந்தியாவில் ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. லிவ் இந்த உறவில் இருந்த அவரது காதலன், ஷ்ரத்தாவை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி பின்னர் அதனை அப்புறப்படுத்தியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விவகாரம் அம்பலமானது. அதன்படி தான் சுவீடன் நாட்டில் ஒன்று நடந்துள்ளது.

சுவீடன் நாட்டில் நார்வேயை சேர்ந்த 57 மற்றும் 60 வயது கொண்ட தம்பதி வசித்து வந்துள்ளனர். மேற்கு சுவீடனில் இருந்து 340 கி.மீ. தொலைவில் உள்ள Arjang என்ற பகுதியில் இந்த தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் 60 வயது மூதாட்டி நீண்ட வருடங்களாக பார்க்கவில்லை என்று அவரது 57 வயது கணவர் மீது, மூதாட்டியின் உறவினர் போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த 57 வயது கணவரை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது இவரது மனைவி கடந்த 2018-ம் ஆண்டு கேன்சர் நோயால் உயிரிழந்தார். தனது மனைவி உயிரிழந்ததையடுத்து அவரை என்ன செய்வது என்று யோசித்து தனது வீட்டில் உள்ள Freezer-ல் வைத்துள்ளார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவரை புதைத்துள்ளார்.

அவரது மனைவியை பற்றி வெளியே இருந்து யாரேனும் கேட்டால், அவர் வெளியே சென்றிருப்பதாகவும், தூங்கிக் கொண்டிருப்பதாகவும், வெளியூர் சென்றுள்ளதாகவும் கூறியே பல வருட காலமாக சமாளித்து வந்துள்ளார். இதையடுத்து உறவினர் அளித்த புகாரில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மனைவியின் ஓய்வூதிய பணத்திற்காக, அவரை இறந்ததை வெளியே சொல்லாமல் இருந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த நிகழ்வை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்த நீதிபதி, குற்றவாளியான 57 வயது நபருக்கு 3.5 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வேலை வாங்கி தருவதாக மோசடி.. வடமாநில தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த கும்பல் - சிக்கியது எப்படி ?