உலகம்
பனிப்போருக்கு பிந்தைய பிரமாண்டமான போர் பயிற்சி.. ரஷ்யாவை மிரட்ட அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த நேட்டோ !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பிரம்மாண்டமான போர் பயிற்சியை நேட்டோ கூட்டமைப்பு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா -சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுக்கு இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், அப்போது நேட்டோ நாடுகள் சார்பில் பிரமாண்டமான போர் பயிற்சிகள் நடைபெற்றது.
ஆனால் சோவியத் யூனியன் பிளவுண்ட பின்னர் நேட்டோ சார்பில் பெரிய அளவிலான போர் பயிற்சிகள் ஏதும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் தற்போது உக்ரைன் -ரஷ்யா போரினைத் தொடர்ந்து ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கும் பிரமாண்ட போர் பயிற்சியை நடத்த நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜெர்மனி,போலந்து மற்றும் பால்டிக் நாடுகளில் இந்த போர் பயிற்சி நடைபெறும் என நேட்டோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும், இதில் அதிநவீன ஆயுதங்களும் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!