உலகம்

அதிகரிக்கும் திருட்டு.. Chocolates, Toothpasteக்கு பூட்டு: தத்தளிக்கும் பல்பொருள் அங்காடி நிலையங்கள்!

அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை காரணமாக மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்பொருள் அங்காடிகளில் டூத்பேஸ்ட், சாக்லேட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் திருடிச் செல்கின்றனர். இந்த திருட்டு சம்பவம் வால்மார்ட், டார்க்ட் உள்ளிட்ட முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களிலும் இப்படியான சம்பவம் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தால் தங்களுக்கு கடுமையாக நிதி பற்றாக்குறை ஏற்படுவதாக விற்பனை நிறுவனங்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் 120% திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக Arget நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரையன் கார்னெல் கூறுகிறார்.

இதைத் தடுக்கும் விதமாகப் பல விற்பனை நிலையங்களில் சாக்லேட், டூத்பேஸ்ட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை மக்கள் எளிதில் எடுக்காமல் இருக்கும் வகையில் கண்ணாடி அறையில் வைத்து அதற்குப் பூட்டுப் போட்டு விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர்கள் கேட்ட பிறகே அதை ஊழியர்கள் எடுத்துக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்தியா செய்த சாதனை இதுதான் - பாக். முன்னாள் வீரர் புகழாரம் !