உலகம்

உலகின் பார்வை நிலவில்.. இந்தியாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்!

உலக நாடுகள் அனைத்தும் நிலவில் ஆய்வு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா சந்திரயான் 1, சந்திரயான் 2 விண்கலங்களை அனுப்பியது.

இதையடுத்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்கா இந்தியாவின் இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டார் வெற்றி கரமாகக் கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது.

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளதை அடுத்து இந்த மகத்தான வரலாற்றுச் சாதனையை நாடே கொண்டாடியது.

இந்தியாவின் இந்த வெற்றியை அடுத்து ஜப்பான் வரும் 28ம் தேதி காலை 9.26 மணிக்கு நிலவிற்கு விண்கலம் அனுப்புகிறது. முன்னதாக 27ம் தேதி விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விண்கலம் ஏவும் திட்டம் 28ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் 2022ம் தேதி நவம்பர் மாதம் நிலவில் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அதேபோல் கடந்த மாதம் சோதனையின் போது ஒரு புதிய வகை ராக்கெட் வெடித்தது. தற்போது நவீனப் படுத்தப்பட்ட லேண்டார் வெற்றி கரமாக நிலவில் தரையிறங்கும் எனஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது விக்ரம் லேண்டர்.. உலகில் யாரும் படைக்காத சாதனையைப் படைத்த இந்தியா !