உலகம்

கைகோர்த்த 6 நாடுகள்.. அமெரிக்காவிற்கு செக் வைக்க ஸ்மார்ட் மூவ் - பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாஸ்டர் பிளான் !

பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளின் கூட்டமைப்புதான் தான் பிரிக்ஸ். இந்த அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

2010ம் ஆண்டு முதல் இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு ஆன்லைன் வழியாக மட்டுமே நடந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி மாநாடாக இந்தாண்டு நடந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தென்னாப்ரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது. இதில் ரஷ்ய அதிபர் புதின் தவிர பிற நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறுவுத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளிடையேஉள்ள சுமுக உறவு மற்றும் பொருளாதார வர்த்த உடன்பாடுகள் குறித்து விவாதிக்கபட்டது. மேலும் பிரிக்ஸ் கூட்டமையில் பிற நாடுகள் இணையும் நீண்ட நாள் கோரிக்கையும் விவாதிக்கப்பட்டது. இந்த அமைப்பில் இணைவதற்கு 23 நாடுகள் விருப்பம் தெரிவித்து விண்ணம் அளித்துள்ளனர்.

ஏற்கெனவே கூட்டமைப்பில் பிற நாடுகளை இணைப்பதற்கு இந்தியா சீனா ஆதரவு தெரிவித்த நிலையில், மீண்டும் தனது ஆதரவை இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் தெரிவித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மாநாட்டில் கூடுதலாக அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஈரான் ஆகிய 6 நாடுகளை புதியதாக பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க முடிவு செய்துள்ளதாக தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்தார்.

இதன்மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றவுள்ள நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு பெரிய அளவில் உயர்ந்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வல்லரசு நாடாக தங்களை காட்டிக்கொள்ளும் அமெரிக்கா தனக்கில் கீழ் பல நாடுகளை பல்வேறு பெயர்களில் கூட்டமைப்பாக சேர்த்துள்ள நிலையில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய முக்கிய நாடுகள் அமெரிக்காவின் கூட்டமைப்பை விட வழுவான கூட்டமைப்பை கட்டியிருப்பது பெரும் பாராட்டுக்குறியதாக அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.

Also Read: “கூலிப்படை ஆர்மி.. வாக்னர் குழு தலைவரை போட்டு தள்ளிய ரஷ்ய கும்பல் ?” : சினிமாவை மிஞ்சும் கிரைம் ஸ்டோரி !