உலகம்

கிரிமியா பாலத்தின் மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்.. முதல் முறை ஒப்புக்கொண்ட உக்ரைன்.. நடந்தது என்ன?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 உள்ளிட்ட பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றது.

மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக கவுண்டர் அட்டாக் தாக்குதலை நடத்துவதாக அறிவித்தது. அப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரிமியாவில் அமைந்துள்ள பாலம் மீது ட்ரோன் தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த பாலம் சேதமடைந்த நிலையில், போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது.

இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், இது குறித்து உக்ரைன் எந்த கருத்தும் கூறாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என உக்ரைன் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரிமியாவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் இதற்க்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தரப்பிலும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: "தமிழர்கள் இந்தியை கற்க வேண்டும், சமஸ்கிருதத்தில் மட்டுமே அறிவு இருக்கிறது" - குஜராத்தில் அமித்ஷா பேச்சு!