உலகம்

100 அடி பள்ளத்தில் விழுந்த 13 வயது சிறுவன்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட் : மனதை பதறவைக்கும் சம்பவம்!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ளது கிராண்ட் கேன்யன் என்ற தேசிய பூங்கா. இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடம்.

இந்த மலைக்குன்றின் மேலே ஏறிசெல்வது ஒரு சாகச பயணம் போல் இருக்கும். மிகவும் ஆபத்தான மலைக்குன்று என்பதால் இங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

இந்நிலையில், வியாட் காஃப்மேன் என்ற 13 வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் இந்த சுற்றுலா தளத்திற்கு வந்துள்ளார். மலைக்குன்றின் மீது நின்று கொண்டு அப்பகுதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் சிறுவன் சற்று விலகி நின்ற போது எதிர்பாரத விதமாக மலைக்குன்றின் மீது இருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பிறகு கை, கால்கள் முறிந்த நிலையிலிருந்த சிறுவனை மீட்டு விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதனை செய்தபோது மண்ணீரல், நுரையீரல், மூலையில் பாதிப்பு என மிகவும் ஆபத்தான நிலையில் சிறுவன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் மருத்துவர்கள் சிறுவனுக்குத் தொடர் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த சிறுவன், "நான் மலை உச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மற்றவர்களுக்கு செல்போனில் படம் எடுப்பதற்காக வழி விட்டபோது அங்கிருந்து கீழே விழுந்தனர். பின்னர் நான் கண்விழித்தபோது யாரே என்னை விமானத்தில் ஏற்றி செல்வது தெரிந்தது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ரசிகர்களுக்கு தெரிந்தது இப்போதுதான் பயிற்சியாளருக்கு தெரிகிறதுபோல - அணி குறித்து டிராவிட் கூறியது என்ன?