உலகம்

13 வயது முதல் 38 வயது வரை.. உலகின் நீளமான தாடி.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண் !

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் வசித்து வருபவர் எரின் ஹனிகட். 38 வயதுடைய இவர் தற்போது உலகின் மிக நீளமான தாடி வளர்த்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

எரின் ஹனிகட்டின் தாடியின் நீளம் 30 செ.மீ ஆகும். இவர் தனது 13 வயதில் இருந்தே தாடியை வளர்க்க தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் தனது முகத்தில் முடி இருப்பதை வித்தியாசமாக நினைத்த அவர், அதனை ரேசர் பயன்படுத்தி அகற்றியுள்ளார்.

பிறகு அதனை நிறுத்திக்கொண்ட அவர், தாடி வளர்க்க எண்ணியுள்ளார். பொதுவாக ஆண்களை போல் பெண்களுக்கும் முடி வளர்ச்சி என்பவது இருக்கும். ஆனால் அது முகத்தில் அதிக அளவு வளர்கிறது என்றால், ஹார்மோன் சமநிலைதான் காரணமாகும். எரின் ஹனிக்கட்டுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (polycystic ovarian syndrome - PCOS) என்ற நோய் உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹார்மோன் சமநிலை ஏற்படும். எனவே எரினுக்கும் அது ஏற்பட்டதால் அவரால் தாடியை நீளமாக வளர்க்க முடிந்தது. தற்போது சாதனை படைத்திருக்கும் எரினுக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், அவர் இந்த PCOS பிரச்னையால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

விவியன் வீலர்

முன்னதாக இதே போல் நீளமாக தாடி வளர்த்த சில பெண்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு 25.5 செ.மீ அளவு தாடி வளர்த்து அமெரிக்காவை சேர்ந்த விவியன் வீலர் என்ற 72 வயது மூதாட்டி கின்னஸ் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 10 நிமிடம் நின்றாலே நீல நிறத்தில் மாறும் கால்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள் !