உலகம்
காதலுக்கு OK சொல்லாத பெற்றோர்.. ரூ.2484 கோடி சொத்தை உதறி தள்ளிய இளம்பெண்: யார் இந்த ஏஞ்சலினா பிரான்சிஸ்?
மலேசியாவில் பிரபல தொழிலதிபராக இருப்பவர் கூ கே பெங் (Khoo Kay Peng). தற்போது 83 வயதாகும் இவர் மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் டாப் 50 பணக்காரர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தனர். இவருக்கு பாலின் சாய் ( Pauline Chai) என்பவருடன் கடந்த 1970-ம் ஆண்டு திருமணமானது. பாலின் சாய் மிஸ் மலேசியா பட்டம் வென்று சாதனை படைத்தார்.
கூ கே பெங் - பாலின் சாய் தம்பதிக்கு ஏஞ்சலினா என்ற பெண் குழந்தை உள்ளது. ஏஞ்சலினா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த போது, அங்கே சக மாணவரான ஜெடிடியா பிரான்சிஸ் என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் நீண்ட நாள் காதலை ஏஞ்சலினா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞர் பண வசதி இல்லாதவர் என்று கூறி அவரது தந்தை நிராகரித்துள்ளார்.
தொடர்ந்து அவரை திருமணம் செய்ய கூடாது என்று ஏஞ்சலினாவின் தந்தை விடாப்பிடியாக இருக்க, தனது காதலை விட்டு கொடுக்காத ஏஞ்சலினா தனது காதலனுக்காக பெற்றோரை விட்டு வெளியேற முடிவெடுத்தார். அப்படி செய்தால் சொத்து கிடையாது என்று சினிமா பாணியில் அவரது தந்தை மிரட்டவே, தனக்கு எதுவும் வேண்டாம் என்று சுமார் ரூ.2484 கோடி சொத்தை வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியேறினார்.
தொடர்ந்து ஏஞ்சலினா தனது காதலன் ஜெடிடியாவை 2008-ல் திருமணம் செய்துகொண்டார். காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை அவரது காதலன் ஜெடிடியா மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறார் என்று ஏஞ்சலினாவே தெரிவித்துள்ளார். மேலும் வீட்டை விட்டு தனது காதல் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் அவரது பெற்றோரை சந்தித்துள்ளார் ஏஞ்சலினா.
ஆனால் இம்முறை தனது தாய், தந்தையான கூ கே பெங் - பாலின் சாய் ஆகியோரின் விவாகரத்து செய்வதாக முடிவெடுத்து அதன் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு சாட்சிக்காக ஏஞ்சலினா நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். தந்தை பணம் சம்பாதித்து கொண்டிருந்த போது தாய் தான் முழுவதுமாக குடும்பத்தை பார்த்துக் கொண்டதாக தனது தாய்க்கு ஆதரவாக பேசினார்.
இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு கூ கே பெங் - பாலின் சாய் தம்பதிக்கு விவாகரத்து கிடைத்தது. மேலும் கூ கே பெங், தனது மனைவியான பாலின் சாய்க்கு £64 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 673 கோடியே 95 லட்சத்து 25 ஆயிரம்) நஷ்ட ஈடாக வழங்கினார். இது தான் இதுவரை வழங்கப்பட்ட நஷ்ட ஈடு பணத்தில் இதுவே அதிகமாகும்.
எனினும் தனது பெற்றோர் விரைவில் ஒன்றாக சேர்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஏஞ்சலினா. மேலும் "நாம் எப்போது வேண்டுமானாலும் பணத்தை சம்பாதித்து விடலாம். ஆனால் மகிழ்ச்சியான விலைமதிப்பற்ற காதலை நாம் அப்படி பெற முடியாது" என்றுள்ளார். இவரது காதல் விவகாரம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!