உலகம்
இரவில் NO internet.. 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் பயன்படுத்த தடை: சீனாவில் சிறுவர்களுக்கு கட்டுப்பாடு!
இந்த நவீன உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். கையடக்கத்தில் இருக்கும் இந்த செல்போன்கள் மூலம் நாம் உலகத்தையே அறிந்து கொள்கிறோம்.
அதேபோல் பல விதமான சமூகவலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் மனித உடல் பாகத்தின் ஒன்றாகவே செல்போன் மாறிவிட்டது. இதனால் 24 மணி நேரமும் பலர் செல்போனை பயன்படுத்துகிறார்கள்.
தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் முது, கழுத்து வலி மற்றும் ஞாபகமறதி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்றைய காலக் கட்டத்தில் செல்போனை நம்மால் தவிர்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் இளம் தலைமுறைகளைப் பாதுகாக்கும் வகையில் சீனாவில் சிறுவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு புதிய கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதில், 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரமும் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் 40 நிமிடங்கள் மட்டுமே செல்போன்களை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையில் இணையச் சேவையைப் பயன்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவிக்கச் செப்டம்பர் 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இந்த விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!