உலகம்

கர்ப்பிணிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள்: சிகிச்சை பெற வந்தவர்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்

நியூயார்க்கில் பிரபலமான மருத்துவராக இருந்தவர் ராபர்ட் ஹேடன். 64 வயதுடைய இவர் மகப்பேறு மருத்துவராக இருந்துவந்துள்ளார். நன்றாக மருத்துவம் பார்ப்பதாக இவரிடம் பல பகுதிகளில் இருந்து பெண்கள் சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஆனால் அவர்களை இந்த மருத்துவர் தவறாக நடத்தி வந்துள்ளார். அதாவது அவரிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

90'களில் இருந்தே இவர் இவ்வாறு செய்து வந்துள்ளது 2012-ல் தான் வெளிவந்துள்ளது. 90களில் மருத்துவர், கொலம்பியா பல்கலைகழகத்தில் பணி புரிந்து வந்துள்ளார். அப்போதில் இருந்தே தனது சித்து வேலைகளை தொடங்கியுள்ளார். தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களை மிரட்டியும், தன்னை ஈர்க்க வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

கர்ப்பிணி பெண்கள் என்றும் பாராமல் அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். இவ்வாறு அவர் 200- க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து 2012-ல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தைரியமாக வெளியில் வந்து புகார் தெரிவித்தார். அதன்பிறகே போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர். பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட வேறொரு பெண் கடந்த 2014-ல் முன் வந்து புகார் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த சமயத்தில் மட்டுமே சுமார் 20 பெண்கள் இவர் மீது புகார் தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேலும் பல பெண்கள் முன் வந்து தாங்களும் பாதிப்புக்கு உள்ளானதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து மன்ஹாட்டனில் உள்ள ஃபெடரல் வழக்கறிஞர்கள் இந்த மருத்துவருக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு கடும் வாதங்களை வைத்து குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அதோடு மருத்துவர் ராபர்ட் ஹேடனால் பாதிக்கப்பட்ட பெண்களில் சில பிரபலங்களும் இருந்துள்ளனர். இப்படியே இந்த வழக்கு பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்டு எம்.பெர்மன், இது மிகவும் மோசமான வழக்கு என்றும், தான் இதுவரை இது போன்ற வழக்கை பார்த்தது இல்லை என்றும் கூறி, குற்றவாளியான மருத்துவர் ராபர்ட் ஹேடனுக்கு 20 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். தற்போது 60 வய்து இருக்கும் மருத்துவர் தனது மீதி நாட்களையும் சிறையில் கழிக்க வேண்டும். இவருக்கு இதுபோன்ற தண்டனை வழங்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read: திடீரென மலையில் மோதிய விமானம்.. காட்டுத் தீயை அணைக்க முயன்றபோது நேர்ந்த சோகம் ! - எங்கு தெரியுமா ?