உலகம்
இலங்கையில் பொது நாணயமாக இந்திய ரூபாயை பயன்படுத்த ஆலோசனை.. இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கருத்து !
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்தது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தனர்.இதனால் கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை விலக வேண்டும் என வலியுறுத்தி ஆவேசத்துடன் இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையையும் மக்கள் கைப்பற்றினர்.
இதனை அடுத்து கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் புதிய அதிபராக ரணில்விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.இருப்பினும் இன்னும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போது இலங்கையின் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், அதற்கு இந்தியா அந்த நாட்டுக்கு செய்த பொருளாதார உதவி முக்கிய காரணமாக அமைந்தது. உணவு, எரிபொருள் போன்ற முக்கிய பொருள்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பி அந்நாட்டு மக்களுக்கு உதவியது.
இதுதவிர தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கட்டங்களாக உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களை இலங்கைக்கு அனுப்பி உதவினார். இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் இந்த உதவிக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவித்த சமூகவலைத்தள பதிவுகள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், இலங்கையின் நாணய மதிப்பு இன்னும் போதிய அளவு உயராத நிலையில், இந்திய ரூபாவை பயன்படுத்தி இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்தவுள்ளதாகவும் இந்திய ரூபாயை இலங்கையும் பொது நாணயமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதால் இலங்கை வளமான வரலாறு, கலாசார பாரம்பரியம், 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட கால நட்பு ஆகியனவற்றால் பயனடைகிறது. விரைவில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதைக் காண விரும்புகிறேன். விரைவில் இந்திய ரூபாயையே இலங்கையிலும் ஒரு பொது நாணயமாக பயன்படுத்தினாலும், அதில் பெரிய வித்தியாசம் இருக்கப்போவதில்லை. அதை, எப்படி சாத்தியப்படுத்துவது என்று இனி ஆலோசிக்கப் போகிறோம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!