உலகம்
தடைசெய்யப்பட்ட குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா.. நேட்டோ நாடுகளுக்குள் ஏற்பட்ட புகைச்சல் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றது.
இதுதவிர அமெரிக்கா, உள்ளிட்ட நேட்டோவின் அதிநவீன ஆயுதங்களும் உக்ரைனுக்கு கிடைத்த நிலையில், இதனைத் கொண்டு இனி தற்காப்பு உத்தியை கைவிட்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அறிவித்த நிலையில், கடந்த வாரம் அந்த தாக்குதல் நடைபெற்றது.இந்த தாக்குதலின்போது அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகள் அதிக பங்குவகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அந்த பீரங்கிகள் எதிர்க்கவே முடியாதது என விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், இந்த தாக்குதலில் ரஷ்யா தோல்வியைத் தழுவும் என மேற்கத்திய ஊடகங்கள் கூறின.
ஆனால், இந்த தாக்குதலில் 8 லெப்பா்ட்-2 பீரங்கிகளை ரஷ்யா தாக்கி அளித்ததாக அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்த அதிநவீன ஆயுதங்களை கூட ரஷ்யா அழித்த நிலையில், தற்போது போதிய ஆயுதங்கள் இல்லாமல் உக்ரைன் தடுமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக Clusters என அழைக்கப்படும் கொத்து குண்டுகளை அமெரிக்கா உக்ரைனுக்கு கொடுத்து உதவப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், அமெரிக்கா அரசின் இந்த அறிவிப்பு சக நேட்டோ நாடுகளையே அதிர்ச்சியடைந்த வைத்துள்ளது. பொதுமக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய இந்த கொத்து குண்டுகளை உலகில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன. இதில் நேட்டோ நாடுகளும் அடக்கம்.
இதனால் இந்த கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு நேட்டோ நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. அதையும் மீறி கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு கொடுப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இதில் நேட்டோ நாடுகள் மத்தியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது குற்றம் சாட்டிய நிலையில், தற்போது அதே செயலை அமெரிக்க செய்யவுள்ளதால் அதன்மீதும், போரில் உக்ரைன் பக்கம் நிற்கும் தங்கள் மீதும் போர் குற்றங்களில் ஈடுபடுவதாக விமர்சனம் எழும் என அந்நாடுகள் அஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!