உலகம்

விமானத்தில் இருந்த 19 பயணிகளை இறக்கிவிட்டு சென்ற விமானம்..எடையால் நேர்ந்த சோகம்.. பின்னணி என்ன ?

கடந்த 5-ம் தேதி அன்று ஈசி ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஸ்பெயினின் லான்சோரைட் நகரில் இருந்து இருந்து எங்கலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றுகொண்டிருந்துளது. இந்த அவ்விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்த நிலையில், சரியாக இரவு 9.45 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது.

ஆனால், திடீரென அந்த பகுதியில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வேகமாக காற்று வீசத் தொடங்கியுள்ளது. மேலும், அந்த விமான ஓடுதளமும் சிறியதாக இருந்துள்ளது. இந்த சூழலில் விமானத்தின் தற்போதைய எடையோடு விமானத்தை எடுத்தால் அது ஏதேனும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் என விமானிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 20 பயணிகளை இறக்கிவிட விமானி முடிவெடுத்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் விமான நிறுவனத்தினரிடம் பேசிய நிலையில், அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், அவ்வாறு இறங்கும் பயணிக்கு 500 யூரோ வழங்கவும் விமான நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் பின்னர் விமான பணிப்பெண்களிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானத்தின் நிலையை பயணிகளிடம் கூறி, விமானத்திலிருந்து யார் இறங்க வேண்டும் என்பதை பயணிகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு இறங்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட்டு, தங்கும் செலவு, உணவோடு 500 யூரோ வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதன்பின்னர் 19 பயணிகள்விமானத்தில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்த நிலையில், விமானம் இரவு 11.30 மணிக்கு அங்கிருந்து பத்திரமாக புறப்பட்டு சென்றது. அதன் பின்னர் மீதம் இருந்த பயணிகள் அடுத்த விமானத்தில் லிவர்பூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Also Read: மணிப்பூரில் தொடரும் வன்முறை.. கலவரத்துக்கு இடையே இணையதள சேவைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி !