உலகம்

லாட்டரியில் 24 கோடி.. போதையில் சீட்டை தொலைத்த உரிமையாளர்.. ஏமாற்ற பார்த்த பார் ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

அமெரிக்காவில் அமைந்துள்ள மாசசூசெட்ஸ் (Massachusetts) நகரை சேர்ந்தவர் பால் லிட்டில். மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். லாட்டரிக்கு பெயர் போன இந்த நகரத்தில் இந்த நபரும் கடந்த ஜனவரி மாதம் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த சீட்டை வாங்கிவிட்டு அருகே இருக்கும் பார் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கே நல்ல போதை தலைக்கேறிய நிலையில் இருந்ததால், தவறுதலாக அந்த பாரிலிலேயே விட்டு விட்டார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து சென்று விட்ட நிலையில், அவர் தவறவிட்ட அந்த லாட்டரி சீட்டை அந்த பாரில் வேலை பார்த்து வந்த 25 வயது இளைஞரான கார்லி நன்ஸ் (Carly Nunes) என்பவர் எடுத்து வைத்துள்ளார். மறுநாள் தனது லாட்டரி சீட்டை தேடியுள்ளார் மெக்கானிக் பால் லிட்டில். இருப்பினும் அது எங்கே சென்றது என்று தெறியாமல் அப்படியே விட்டு விட்டார்.

இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் விற்கப்பட்ட அந்த லாட்டரி சீட்டு எண்ணுக்கு, இந்திய $3000 (இந்திய மதிப்பில் 24 கோடியே 57 லட்சத்து 58,950 ஆயிரம் - 24,57,58,950 ரூபாய்) விழுந்துள்ளது. இதனால் அந்த லாட்டரி கம்பெனி இவருக்கு அழைப்பு விடுத்து இந்த விவரத்தை தெரிவிக்கவே, பெரும் பதற்றமானார். தனது வீட்டையே தலைகீழாக புரட்டி போட்டு எங்கே என தேடினார். இருப்பினும் அது கிடைக்கவில்லை.

இதனால் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கி இருந்தார். இந்த விவரத்தை அந்த பாரில் வேலை செய்த இளைஞர் கார்லி அறிந்துகொள்ளவே, தான் தான் பால் லிட்டில் என்று அந்த லாட்டரி சீட்டை கொடுத்து பணம் பெற முயன்றுள்ளார். ஆனால் அவர் மீது அங்கிருந்தவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இதனால் அவரிடம் மீண்டும் மீண்டும் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கடைக்கு சென்று அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது, உண்மையாக பால் லிட்டில் தான் இந்த டிக்கெட்டை வாங்கியது உறுதியானது. மேலும் உண்மையான வெற்றியாளரை அடையாளம் கண்டனர். இதையடுத்து ஏமாற்றி பணத்தை பெற முயன்ற குற்றத்துக்காக இளைஞரை போலிசார் கைது செய்தனர். அதோடு அவருக்கு 8 லட்ச பணத்தை அபராதமாக விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே வெற்றியாளர் பால் லிட்டிலுக்கு அவர் வென்ற பணத்தை லாட்டரி நிறுவனம் கொடுத்தது.

தான் பெற்ற 24 கோடி பணத்தை வைத்து தனது வீட்டை பராமரிக்கவுள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை வைத்து காலத்தை நகர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆள் மாறாட்டம் செய்து பணத்தை பெற நினைத்த நபருக்கு நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது.

Also Read: வேகமாக ஓட்டி வந்த கார்.. பைக் மீது இடித்து விபத்து.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் TTF வாசன் !