உலகம்

இறுதியில் கண்டறியப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள்.. இறந்தவர்களின் உடல் பாகங்களின் நிலை என்ன ?

1912ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளை ஏற்றிக் கொண்ட டைட்டானிக் கப்பல் அமெரிக்காவிற்குச் சென்றது. இந்த கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றபோது பனிப்பாறை மீது மோதி டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து கடலுக்கு அடியில் மூழ்கியது.

இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக வரலாற்றில் மிகவும் மோசமாகக் கப்பல் விபத்தாக இந்த விபத்து தற்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் 1958ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 1997ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாக வைத்து டைட்டானிக் படம் வெளியானதும் டைட்டானிக் கப்பல் உலகப்புகழ் பெற்றது.

இதனைத் தொடர்ந்து டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் கடலுக்கு அடியில் சென்று பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவும் பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

அதன்படி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஹமிஷ் ஹார்டிங், ஷஷாத் தாவூத், இவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிபர் பால் ஹெண்ட்ரி, ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் ஆகிய 5 பேர் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடக் கடலுக்கு அடியில் சென்றனர்.

ஆனால், இடையில் இவர்கள் சென்ற நீர்மூழ்கியின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், இரண்டே நாளில் நீர்மூழ்கி வெடிவிபத்தில் சிக்கி அதில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பது.

இந்த நிலையில், டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நீர்மூழ்கியின் .சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் டைட்டனின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் இந்தப் பாகங்களில் அடங்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் அந்த நீர்மூழ்கி குறித்து ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திருமணத்துக்கு மறுத்த காதலியின் தந்தை.. ஆத்திரத்தில் காதலன் செய்த செயலால் அதிர்ச்சி.. கேரளாவில் பகீர் !