உலகம்

110 ஆண்டுகளுக்கு பிறகும் 5 உயிர்களை காவு வாங்கிய டைட்டானிக்.. நீருக்கடியில் சென்றவர்களுக்கு நடந்தது என்ன?

உலகத்திலேயே மிகவும் பிரம்மிப்பாக அனைவரும் பார்த்த ஒரு திரைப்படம் தான் டைட்டானிக். 'டைட்டானிக்' திரைப்படம் 1997-ம் ஆண்டு வெளியாகி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் இது உலக மக்களிடமும் பெரிய அளவில் பிரபலமானது. இதனால் இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதையும் பெற்றது. இந்த படமானது, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த 'டைட்டானிக்' என்ற கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்தது.

1912-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவிற்குச் சென்ற டைட்டானிக் கப்பல், அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றபோது பனிப்பாறை மீது மோதி இரண்டாக உடைந்து கடலுக்கு அடியில் மூழ்கியது. இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக வரலாற்றில் மிகவும் மோசமாகக் கப்பல் விபத்தாக இந்த விபத்து தற்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் 1958ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போதும் கூட இந்த கப்பலின் எச்சங்கள் நீருக்கடியில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த டைட்டானிக் கப்பலின் எஞ்சிய பாகங்களை ஒரு முறையாவது நீருக்குள் சென்று நேரில் காண வேண்டும் என்று பலரும் ஆசை கொண்டுள்ளனர். பல பேருக்கு இந்த ஆசை உருவானாலும், சில பேர் தான் அதற்காக முயற்சி எடுப்பர்.

அவ்வாறு விருப்பப்படுபவர்களை குறிப்பிட்ட தொகைக்கு நீருக்கடியில் கப்பல் மூலம் சில நிறுவனங்கள் பாதுகாப்புடன் அழைத்து சென்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஹமிஷ் ஹார்டிங், ஷஷாத் தாவூத், இவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிபர் பால் ஹெண்ட்ரி, ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் ஆகிய 5 பேர் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடக் கடலுக்கு அடியில் சென்றனர்.

இவர்கள் கடந்த 18-ம் தேதி 700 கிலோ மீட்டர் சென்றபோது இவர்களது கப்பலின் கிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து இவர்களை மீட்பதற்கான பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நீருக்கடியில் காணாமல் போன தொழிலதிபர்கள் தற்போது உயிரிழந்த நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

109 ஆண்டுகளுக்கு பிறகும் கூட டைட்டானிக் கப்பலின் எஞ்சிய பாகங்களை காண சென்ற 5 பேரை அது பலி வாங்கியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீருக்குள் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் செல்லக்கூடிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதனை நேரில் காணும் பயணத்தில், ஒவ்வொருவரும் தலா ரூ.2 கோடி ஆகும். ஏற்கனவே இதுபோல் அதிகமானோர் சென்று கப்பலை கண்டு கழித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "டைட்டானிக் கப்பலுக்காக திருமணம் கூட செய்யவில்லை.." - 30 ஆண்டு கனவை நினைவாக்கிய பெண் !