உலகம்

ரஷ்யாவுக்கு வைத்த பொறியில் சிக்கிய ஜெர்மனி.. முதல் முறை மைனசுக்கு சென்ற GDP : ஐரோப்பிய யூனியனில் சோகம் !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது.வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. இதற்கு ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் ஆயுத மற்றும் பொருளாதார உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

அதோடு போரின் ஆரம்பத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ஆரம்பத்தில் ரஷ்யா தடுமாறிய நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விற்பனையை தடை செய்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் ஒரு வருடமாக திண்டாடி வந்த நிலையில்,தற்போது இது உச்சத்தை அடைந்துள்ளது.

ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் முன்னணி நாடான ஜெர்மனியில் தற்போது GDP வளர்ச்சி மைனஸ் நிலைக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தொழிற்துறை, சேவை துறை, அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய நாடாக இருக்கும் ஜெர்மனிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை சக ஐரோப்பிய யூனியன் நாடுகளை கவலையடைய வைத்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் உள்ளிட்ட பொருளாதர உதவிகளை ஜெர்மனி அனுப்பியதே இந்த நிலைக்கு காரணம் என்பதால் அந்த நாடுகளில் போருக்கு எதிரான நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: Instagram பக்கத்தில் மதரீதியிலான பதிவு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. பகிரங்கமாக மன்னிப்பு கோரிய IPL வீரர்!