உலகம்
”தமிழ் மொழியை அச்சுறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்”.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சித் தலைவர்களை குறிவைத்து, இந்திய அரசின் விசாரணை அமைப்புகள் சோதனைகளை நடத்தி வருகிறது. அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.க. அரசு, தனது நடவடிக்கைகள் மூலம் மக்களை மிரட்டி வருகிறது.
பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டேன் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட மக்களின் பிரச்சனைகளை மூடிமறைக்கவே, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தியுள்ளார்.
இந்தியா என்பது உலகின் மற்ற நாடுகளை மதிக்கும் நாடு. இந்தியா என்பது அன்பை வெளிப்படுத்தும்,மற்றவர்களின் குரல்களை கேட்கும்.வெறுப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் நீங்கள் இங்கு இருக்க மாட்டீர்கள். மாறாக பா.ஜ.க கூட்டத்தில் தான்பங்கேற்று இருப்பீர்கள். நானும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இருந்திருப்பேன்!
தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல கலாச்சாரம்,வரலாறு என்பதையும் தாண்டி, வாழ்வியல் முறையாகும். தமிழ் மொழியை அச்சுறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இந்தியாவின் இதர மொழிகளையும் அதேபோல் தான் மதிக்கிறேன். இந்தியா மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டுஇருப்பதே வேற்றுமையிலும் ஒற்றுமையோடு இருப்பதால்தான்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் உள்ளவர்கள் இந்தியாவில் அதிகாரத்தில் உள்ளனர். பிரதமர் மோடியை கடவுளுக்கு அருகில் அமரவைத்தால், இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை கடவுளுக்கு பிரதமர் விளக்கத் தொடங்கி விடுவார்.
அவரது பேச்சைக் கேட்டு கடவுளுக்கே தனது படைப்பு குறித்து சந்தேகம் வந்துவிடும். விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானம் குறித்தும், வரலாற்று ஆய்வாளர்களுக்கு வரலாறு குறித்தும், போர் குறித்து ராணுவத்திற்கும் பாடம் எடுக்கும் தகுதி உள்ளதாக சிலர் நினைக்கின்றனர்உண்மையில் அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை, அனைத்து விவகாரங்களிலும் அற்பத்தனம் அதிகரித்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
திராவிட மாடலின் ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 1.8 கோடி பேர் பயன் : அப்பாவு புகழாரம்!
-
“பேரம் பேசக்கூடிய கூட்டணியாக எதிர்க்கட்சி கூட்டணிகள் அமைந்துள்ளது!” : துணை முதலமைச்சர் உதயந்தி கண்டனம்!
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!