உலகம்
கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசல்..மூச்சித்திணறி விழுந்த ரசிகர்கள்.. 12 பேர் பலியானதால் அதிர்ச்சி !
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் நாட்டில் கால்பந்து புகழ்பெற்ற விளையாட்டாக உள்ளது. இந்த நாட்டின் தலைநகரமான சான் சால்வடோரில் உள்ள கஸ்கட்லான் மைதானத்தில் நேற்று அலியான்ஸ் மற்றும் FAS ஆகிய இரு அணிகளுக்கு இடையே முக்கியமான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அதிலும் ரசிகர்கள் ஒரே நேரத்தில் போட்டியை பார்க்க மைதானத்தில் நுழைந்த நிலையில், அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதன் காரணமாக பலர் மூச்சு திணறி சரிந்தநிலையில் ஒருவர் மீது ஒருவர் மிதித்துச்சென்றதால் அங்கு பலர் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து மீட்புப்படையினர் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் இந்த நெரிசலில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் நயீப் புகேலே உறுதியளித்துள்ளார். மேலும், கால்பந்து கூட்டமைப்பு, மைதான பொறுப்பாளர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!