உலகம்
மன்னரானதும் முதல் முடிவு.. அரச மாளிகையில் இருந்து தம்பியை வெளியேற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் !
உலக அளவில் பிரபலமான அரச குடும்பம் என்றால் அது பிரிட்டன் அரச குடும்பம்தான். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனியாதிக்கம் செய்துவந்த அந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்னும் பெயரை பெற்றது. அண்ட் அளவு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிட்டனுக்கு காலணிகள் இருந்தது.
20ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நாடுகள் தனி நாடுகளாக பிரிந்தாலும் அதில் பல்வேறு நாடுகளுக்கு மன்னராக பிரிட்டன் மன்னரே இருந்து வருகிறார். பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத் சில மாதங்களுக்கு முன்னர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் முடிசூட்டப்பட்டார்.
இந்த நிலையில், மன்னர் சார்ல்ஸுக்கும் அவரின் தம்பி இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகி பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ விண்ட்சரில் அமைந்துள்ள ராஜ குடும்பத்துக்கு சொந்தமான மாளிகையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
ஆனால், தற்போது அவர் தங்கியுள்ள மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மன்னவர் சார்லஸ் சார்பில் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை இளவரசர் ஆண்ட்ரூ மறுத்துள்ள நிலையில், தம்மை அந்த மாளிகையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட மன்னர் சார்லஸுக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளார்.
இதன் காரணமாக இளவரசர் ஆண்ட்ரூ தங்கியிருக்கும் மாளிகையின் எரிவாயு மற்றும் மின்விநியோகத்தை துண்டிக்க சார்லஸ் மன்னர் முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இளவரசர் ஆண்ட்ரூவை அந்த மாளிகையில் இருந்து அனுப்பி விட்டு, வில்லியம்- கேட் தம்பதியினரை அங்கு குடியமர்த்த சார்லஸ் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு