உலகம்
கஞ்சா கடத்தல் வழக்கு: சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர் -ஐநா கோரிக்கையை நிராகரித்து தண்டனை நிறைவேற்றம்
உலகம் முழுவதும் கஞ்சா போதை கடத்தல் என்பது தடை விதிக்கப்பட்ட ஒன்றாக அமைகிறது. அதையும் மீறி சிலர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இதில் சிங்கப்பூரில் ஒரு படி மேலே போய் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தங்கராஜ் சுப்பையா (46) என்பவர் சிங்கப்பூரில் இருக்கிறார். இவர் சிங்கப்பூர் வாழ் தமிழராவார். இவர் கடந்த 2018-ல் மலேசியாவில் இருந்து சிங்கர்பூருக்கு சுமார் ஒரு கிலோ கஞ்சாவை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். எனவே இவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை வழங்கியது.
ஆனால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை குறைக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு குழு என பல தரப்பில் இருந்தும் சிங்கப்பூர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி தங்கராஜ் சுப்பையா வழக்கிலும் சிங்கப்பூர் அரசிடம் ஐ.நா கோரிக்கை வைத்தது.
மேலும் தங்கராஜ் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், இதில் நியாயமான விசாரணை நடக்கவில்லை என்றும் தங்கராஜூவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதோடு தங்கராஜுக்கு விதிக்க பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் தங்கராஜூவின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்து மரண தண்டனையை உறுதி செய்தது.
இந்த நிலையில் இன்று சாங்கி சிறை வளாகத்தில் தங்கராஜூ தூக்கிலிடப்பட்டு மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு நிறைவேற்றியது. இதன்மூலம் கடந்த ஆறு மாதங்களில் நிறைவேற்றப்பட்ட முதல் மரண தண்டனையாக தங்கராஜூவின் மரண தண்டனையாக இது அமைந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!