உலகம்
சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்பட்ட குழந்தை.. காணாமல் போனதாக நாடகமாடிய தாய்.. விசாரணையில் பகீர் தகவல் !
சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவர். அப்படி இல்லை என்றால், கை குழந்தை என்றால் பணத்துக்கு விற்றுவிடுவர். இதனை தடுக்கவே நாட்டில் தனிச்சட்டம் கடைபிடிக்க படுகிறது. இது இங்கு மட்டுமல்ல, உலக நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் பெற்ற தாயே தனது குழந்தையை சூப்பர் மார்க்கெட்டில் விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிப்பவர் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு 6 வயதில் நோயல் ரோட்ரிக்ஸ்-அல்வாரெஸ் என்ற மகன் இருக்கும் நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து இரண்டாவதாக அர்ஷ்தீப் சிங் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்த பிறகும் சிண்டியின் 6 வயது மகன் நோயல் அவருடன்தான் இருந்துள்ளான். இந்த சூழலில் சிண்டிற்கு அண்மையில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. எனவே சிண்டி மற்றும் அவரது 2-வது கணவர் நோயலை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். இதனாலே அந்த சிறுவன் உடல்நிலை மெலிந்து காணப்பட்டுள்ளார். மேலும் சிண்டியின் கவனம் முழுவதுமே பிறந்த குழந்தைகள் மேலே இருந்துள்ளது.
இதனால் மூத்த மகன் மீது எரிச்சலடைந்த சிண்டி, அவரை ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரை விற்றுவிட்டு திரும்ப வீட்டுக்கு தனியாக வந்துள்ளார். இதையடுத்து தான் உண்டு தனது குடும்பம் உண்டு என்று சிண்டி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் குழந்தை காணாமல் போனதாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சிண்டியின் பக்கத்து வீட்டுக்கறார்கள் அந்த குழந்தை கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் முதலே காணாமல் போனது தெரியவந்தது. மேலும் சிண்டியிடம் விசாரிக்கையில், சிறுவன் தன் முதல் கணவனுடன் இருப்பதாக தான் நினைத்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து விசாரிக்கையில் அந்த சிறுவன் சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்பட்டுள்ளது அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனிடையே எங்கே தான் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் அதோடு சிறுவன் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட 2 நாட்களிலேயே சிண்டியும், அவரது கணவர், இரட்டை குழந்தைகளுடன் துருக்கிக்கு தப்பித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிண்டியும், அவரது குடும்பம் துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!