உலகம்

பேய் எனக் கருதி கொல்லப்பட்டதா குழந்தை.. அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்.. இந்தியாவுக்கு தப்பிய தம்பதி !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எவர்மேனில் சிண்டி (வயது 37) என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தனது இரண்டாவது கணவர் அர்ஷ்தீப் சிங்குடன் வசித்து வருகிறார். இவருக்கு 10 குழந்தைகள் இருக்கும் நிலையில், அதில் 7 குழந்தைகள் இவரோடு வசித்து வருகின்றனர்.

இது தவற 3 குழந்தைகள் அவர்களின் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு சிண்டிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், இந்த குழந்தைகளை தனது மற்றொரு குழந்தையான நோயல் காயப்படுத்தி வந்ததாக தனது பக்கத்து வீட்டினர் மற்றும் குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளது.

மேலும், அந்த குழந்தைக்கு பேய் பிடித்துள்ளதாகவும், இதனால்தான் அந்த குழந்தை பிறகுழந்தைகளை துன்புறுத்தி வருவதாக கூறியுள்ளார். இதனை அவரது கணவர் நம்பியுள்ளார். இது தவிர நோயல் பல்வேறு உடல் குறைபாட்டுடன் பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிண்டி தனது கணவர் மற்றும் 6 குழந்தைகளோடு இந்தியா திரும்பியநிலையில்,நோயல் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்துள்ளது. இதனிடையே நோயலை காணவில்லை என்று அமெரிக்க காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலிஸாரின் சந்தேகம் சிண்டி பக்கம் திரும்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணையில் சிண்டி பல பொய்களை சொன்னது தெரியவந்தது. இதனால் அவர் குழந்தையை கொலைசெய்து இந்தியா தப்பிச்சென்றிருக்கலாம் என போலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சிண்டி மற்றும் அவரின் கணவரை அமெரிக்காவுக்கு வரவழைத்து விசாரணை நடத்த போலிஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: சச்சின் எந்த விளையாட்டு வீரர்.. குஜராத் மாநில வினாத்தாளில் சர்ச்சை.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !