உலகம்
ஆபாச நடிகையோடு தொடர்பு விவகாரம் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் நீதிமன்றத்தில் வைத்து அதிரடி கைது !
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.
தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர் அரசு ஆவணங்களை எடுத்துக்கொண்டதாக டிரம்ப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஆபாச நடிகையோடு தொடர்பில் இருந்ததாகவும் தன் மீதான குற்றச்சாட்டை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகையான ஸ்டோர்மி டேனியல் டொனால்ட் டிரம்ப் கடந்த 2006-ம் ஆண்டு தன்னுடன் நெருக்கமாக இருந்ததாக குற்றச்சாட்டை கடந்த 2016-ம் ஆண்டு சுமத்தினார். மேலும், தனது அனுமதி இல்லாமல் அவர் என்னிடம் தவறாக நடந்தார் என்றும் அவர் கூறியிருந்தார்.
டொனால்ட் டிரம்ப் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது இதன் காரணமாக இந்த விவகாரம் குறித்து பேசாமலிருக்க ஸ்டோர்மி டேனியேலுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்களை சட்டத்துக்கு புறமாக கொடுத்ததாக ஸ்டார்மி புகார் அளித்தார். ஆனால் அதனை விசாரிக்கையில் அந்த பணம் ட்ரம்பின் வழக்கறிஞருக்கு கொடுக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது.
தொடர்ந்து டிரம்புக்கு எதிராக பல விஷயங்கள் இருக்கவே, இதில் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு தயாராக இருந்தனர். இந்த சூழலில் டிரம்ப் மீது முன்புள்ள பல குற்றசாட்டுகளுடன் சேர்ந்து இந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதற்காக டிரம்ப் பலத்த போலீஸ் பாதுகாப்போடு மன்ஹேட்டன் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தார். அங்கே ட்ரம்ப் மீதுள்ள 34 குற்றசாட்டுகளை வழக்கறிஞர் அடுக்கடுக்காக வைத்தார். இதைத்தொடர்ந்து ட்ரம்பிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.
இருப்பினும் அவர் மீதுள்ள குற்றசாட்டுகள் சில நிரூபணம் ஆகியுள்ளதால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிடவே, அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் வகித்த பதவி காரணமாக அவரது கையில் விலங்கு மாட்டப்படவில்லை.
ஆனால் அங்கே தேர்தல் சமயம் நெருங்குவதால் அவர் மீதான விசாரணை அடுத்த ஆண்டு தொடரும் என கூறி, நியூயார்க் நீதிபதி டொனால்ட் ட்ரம்பை எந்தவித முன்-விசாரணை கட்டுப்பாடுகளும் இல்லாமல் காவலில் இருந்து விடுவித்தார். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் ஃப்ளோரிடா புறப்பட்டார். இந்த நிகழ்வால் அங்கே சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!