உலகம்
“என்ன.. காதலிக்க ஒரு வாரம் விடுமுறையா..” - சீன கல்லூரிகளுக்கு அசத்தல் அறிவிப்பு.. காரணம் இதுதான் !
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதன்மையாக விளங்குகிறது சீனா. இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பு சீன அரசு புதிய சட்டம் ஒன்றை விதித்தது. அதன்படி நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தால் பொருளாதாரம் சரிவடைகிறது என்று கூறி, மக்கள் தொகையை கட்டுப்படுத்த 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' என்ற விதியை சீன அரசு கொண்டு வந்தது.
இந்த விதியின் விளைவாக அந்நாட்டில் மக்கள் தொகை குறைய தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை சட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் அதிகமாகாமல் குறைந்தே காணப்பட்டு வருகிறது.
தற்போது நாட்டில் உள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக பெரும்பாலான பெற்றோர் ஒரு குழந்தையை வளர்க்கவே திண்டாடுகின்றனர். இந்த சூழலில் மேலும் குழந்தைகளா என்று அதனை சீன மக்கள் பெரிதாக எண்ணவில்லை. இதன் எதிரொலியாக அந்நாட்டில் பிறப்பு விகிதம் அதிகரிக்காமல் குறைந்தே காணப்பட்டு வருகிறது.
கொரோனா காலங்களில் கூட பல்வேறு நாடுகளில்மக்கள் தொகை அதிகரித்த சூழலில் சீனாவில் அது நிகழவில்லை. எனவே இதனை சரி செய்ய சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர், யார் அதிக குழந்தைகளை பெற்று கொள்கிறார்களோ அவர்களுக்கு சிறப்பு சலுகை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
அதாவது எந்த தம்பதியினர் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு மானியம், வரி தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, கல்வி, வீட்டுக் கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கவதாக சீன அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அது வேலை செய்யவில்லை.
இந்த நிலையில், தற்போது புதிய ஒரு யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது சீனா. அதில் ஒரு பகுதியாக 9 கல்லூரிகளுக்கு காதலிக்க விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதவது சீனாவில் ஒன்பது கல்லூரிகள், இந்த மாதம் மாணவர்களுக்குக் காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்திருக்கின்றன.
அதாவது சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள Fan Mei என்ற கல்விக் குழுவின்கீழ் இயங்கும் 9 கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 7-ம் தேதி வரை வசந்தகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், அன்பு சார்ந்த எண்ணங்களை வளர்க்கவும் கற்றுக்கொள்வார்கள். இந்த வசந்தகால இடைவெளி, நாட்டின் மக்கள்தொகை பிரச்னையைத் தீர்ப்பதற்கும் உதவும் என நம்புவதாகவும் கல்விக் குழு தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!