உலகம்
அமெரிக்க வங்கிகளைத் தொடர்ந்து திவால் நிலையில் சுவிஸ் வங்கி.. சிக்கலில் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள் !
1983-ம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது மிகப்பெரிய அமெரிக்க வங்கிகளில் ஒன்றாகவும் நாட்டின் 16-வது பெரிய வங்கியாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், அதன்பின்னர் பணவீக்கம் அதிகரித்த நிலையில், நஷ்டத்தை ஈடுகட்ட தனது மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் வேறு வழியின்றி விற்றிருப்பதாக அறிவித்தது..
இதன் காரணமாக சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் சுமார் 69% வீழ்ச்சியை சந்தித்தன.இது குறித்த தகவல் பரவியதும் 48 மணி நேரத்தில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி டெபாசிட் பணத்தை நிறுவனங்களும் பொதுமக்களும் வங்கியில் இருந்து எடுத்த நிலையில், வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் சிக்னேச்சர் வங்கியும் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் பெரிய வங்கிகள் அடுத்தடுத்து திவாலானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பலர் வேலையிழப்புக்கு உள்ளாகும் அச்சுறுத்தலும் ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்து ஒரே வாரத்தில் ஐரோப்பிய நாடான ஸ்சுவிச்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் வங்கி பெரும் நிதி சிக்கலில் தவித்து திவால் நிலையில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தை விற்பனை செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.
சில மாதங்களாகவே நிதி சிக்கலில் தவித்து வந்த அந்த வங்கியின் முக்கிய பங்குதாரரான அம்மர் அல் என்பவர் கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு இருப்பை 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது என வெளிப்படையாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்த வங்கியின் பங்குகள் சுமார் 30 சதவீத சரிவை சந்தித்தன.
அதனைத் தொடர்ந்து திவால் நிலையை தவிக்க கிரெடிட் சூயிஸ் வங்கி ஸ்சுவிச்சர்லாந்தின் மத்திய வங்கியிடமிருந்து 54 பில்லியன் டாலர் கடன் பெற்று நிலைமையை சமாளித்தது. தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி நாட்டின் மிகப்பெரிய வங்கியாக இருக்கும் UBS அங்கி, கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவோ அல்லது சிறு பகுதியை வாங்கவோ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!