உலகம்
குரைத்து கொண்டே இருந்ததால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டு நாயை உயிரோடு புதைத்த பிரேசில் பாட்டி.. அதிர்ச்சி !
பொதுவாக விலங்கு பிரியர்கள் உலக அளவில் காணப்படுவர். அதிலும் நாய், பூனை போன்ற விலங்குகள் மீது தீரா பிரியம் கொண்டவர்கள் அதனை வளர்ப்பர். மேலும் தெருவோர விலங்குகளுக்கும் உண்ண உணவு கொடுப்பர். இதுபோன்ற நிகழ்வுகள் உலக அளவு நிகழும்.
இன்னும் சிலர் தங்கள் வீடுகளில் பல்வேறு வகையான நாய்களை வளர்ப்பர். இவ்வாறு வளர்க்கப்படும் நாய்கள், அந்த வீட்டுக்கு சம்பளம் கொடுக்காத ஒரு காவல்காரனாக விலங்குகிறது. இருப்பினும் பல நாய்கள் சாலையில் செல்லும் அனைவரையும் பார்த்து குரைக்கும்; சில நேரங்களில் அவர்களை தாக்கவும் செய்யும். அதோடு நாய்கள் குறைந்துகொண்டே இருப்பதால் பலருக்கும் இடையூறாக இருக்கும்.
இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் நாயின் உரிமையாளர் வீட்டில் வந்து சண்டை போடுவதும், இந்த சண்டையில் உயிர் சேதம் ஏற்படுவதும் அவ்வப்போது செய்திகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. அண்மையில் கூட, நபர் ஒருவர் 'நாய்' என்று அழைத்ததால் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் சொன்னவரை வெட்டியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தற்போதும் அதே போல் ஒரு நிகழ்வு பிரேசிலில் அரங்கேறியுள்ளது. பக்கத்து வீட்டு நாய் ஒன்று குரைத்து கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த 82 வயது மூதாட்டி ஒருவர் அதனை உயிரோடு புதைத்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் ப்ளானுரா என்ற பகுதியில் 82 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் தினமும் குரைத்து கொண்டே இருந்துள்ளது. இதனால் இந்த மூதாட்டி, நாயின் உரிமையாளரிடம் புகாரையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த நாயின் உரிமையாளர் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து அந்த நாயும் இரவு நேரங்களில் குரைத்து கொண்டே இருந்துள்ளது. இதனால் அந்த மூதாட்டியின் தூக்கம் கெட்டுள்ளது. இதனால் எரிச்சலடைந்த அவர், அந்த நாயை இழுத்து பிடித்து வீட்டின் அருகே குழி தோண்டி உயிரோடு புதைத்துள்ளார்.
தொடர்ந்து சில நேரமாக நாயின் சத்தம் கேட்காத வீட்டின் உரிமையாளர் அதனை தேடியுள்ளார். அப்போது இந்த மூதாட்டியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தான்தான் உயிரோடு அதனை புதைத்ததாக கூறியுள்ளார். இதனால் பதறிப்போன அவர் உடனே அந்த குழியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து நாய் உயிரோடு மீட்கப்பட்டது.
பின்னர் அந்த நாயை கால்நடை மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல்துறையில் நாயின் உரிமையாளர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மூதாட்டியை விசாரித்தனர். அப்போது "இனியும் இப்படியே குரைத்து கொண்டிருந்தால் மீண்டும் புதைப்பேன்" என்று திமிராக பதிலளித்துள்ளார். இதையடுத்து 82 வயது மூதாட்டியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பக்கத்து வீட்டு நாய் ஒன்று குரைத்து கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த 82 வயது மூதாட்டி ஒருவர் அதனை உயிரோடு புதைத்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!