உலகம்
அமெரிக்க வங்கி திவால் எதிரொலி.. முற்றிலும் முடங்கிய உலக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.. பின்னணி என்ன ?
அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கி 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ரூ.17 லட்சம் கோடி வரை சொத்துகளை குவித்த அந்த வங்கியில் முதலீடுகள் அதிக அளவில் குவிந்தன. இதனை நீண்ட கால் பங்குகளில் அந்த வங்கி முதலீடு செய்தது.
ஆனால், இந்த நடவடிக்கை அந்த வங்கிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டிவீக்கத்தை அதிகரித்த நிலையில், சிலிக்கான் வேலி வங்கியின் நீண்ட கால முதலீடுகள் வங்கிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு உரிய பங்கை கொடுக்கமுடியாமல் சிலிக்கான் வேலி வங்கி திணறத்தொடங்கியது.
இதனால் வேறு வழியின்றி மொத்த கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் சிலிக்கான் வேலி வங்கி விற்பனை செய்தது. ஆனாலும் போதிய பணத்தை அந்த வங்கியால் திரட்ட முடியவில்லை. இது குறித்த அறிக்கை வெளியே வந்ததும் பங்குகளில் அந்த வங்கியின் மதிப்பு பல மடங்கு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன் பங்குகள் சுமார் 60 % சரிவை சந்தித்தன.
இதனால் அச்சமடைந்த பொதுமக்களும், நிறுவனங்களும் அந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்த இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.25 லட்சம் கோடி பணத்தை திரும்ப பெற்றனர். இதனால் சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இதன் தாக்கம் பங்குசந்தையில் உடனடியாக எதிரொலிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நிலையில், தங்கள் தொகையை எடுக்கமுடியாமல் அந்த நிறுவனங்கள் திணறிவருவதாகவும், இதனால் அன்றாட செலவு மற்றும் ஊதியத்தை கூட வழங்க வழியில்லாமல் ஏராளமான நிறுவனங்களை முடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது உலகப்பொருளாதார மந்தநிலைக்கு வலுவகுப்பதாக பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த பொருளாதார மந்தநிலை உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலானது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களின் முதலீட்டு தொகையை திரும்பபெற்றதால் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. இது உலகளாவிய பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நிலை மீண்டும் வரலாம் என உலகளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!