உலகம்
‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி மர்ம கொலை.. தீவிர விசாரணையில் போலிஸ் - பின்னணி?
கடந்த 2019-ம் ஆண்டு உருவான மிகப்பெரிய அலைதான் கொரோனா. இதன் தாக்கம் 2020-ம் ஆண்டு உலகையே உலுக்கியது. சீனாவில் தொடங்கிய இந்த நோய் தொற்றானது, உலகம் முழுக்க பரவியது. ஒவ்வொரு நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டது. உலகம் முழுக்க லாக் டவுன், pandemic என பலவகையான விஷயங்கள் கண்டது.
கொரோனா தொற்று காரணமாக நாளொன்றுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் இந்த தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்தே காணப்பட்டது. சில நாட்களுக்கு பின்னர் இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் ஒவ்வொரு டோஸாக செலுத்திக்கொண்டனர். உலகளவில் இது நடைபெற்றது.
அப்படி இந்த தடுப்பூசி ஒரு சில நிறுவனங்கள் தயாரித்தது. அதில் அதில் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை 18 விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது. அதில் ஒரு விஞ்ஞானிதான் ரஷ்யா, மாஸ்கோவை சேர்ந்த ஆண்ட்ரே போடிகோவ் (Andrey Botikov). 48 வயதான இவர், கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தின் (Gamaleya National Research Center) சூழலியல் மற்றும் கணிதவியல் துறையின் மூத்த விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாஸ்கோவில் உள்ள அவரது வீட்டில் பெல்டால் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சில உள்ளூர் ஊடக செய்தியின்படி, அவரது வீட்டில் திருடன் நுழைந்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதோடு ரஷ்ய கூட்டமைப்பின் விசாரணைக் குழு தகவலின்படி, அவர் கொலை செய்யப்பட்ட அன்று (மார்ச் 2), இவருக்கும் 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அவரை தனது பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும் குற்றம் நடந்த சில மணி நேரங்களிலே குற்றம்சாட்டப்பட்டவர் யார் என்று அதிகாரிகள் தெரிந்துகொண்டனர். தொடர்ந்து அவரது இருப்பிடத்தை அறிந்து அங்கே சென்று அவரை கைது செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் பெயர் அலெக்ஸி Z என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துவிட்டார்.
எனினும் அவர் ஏன் ஆண்ட்ரேவை கொலை செய்தார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கேன்சர் வரும் என்று தகவல்கள் பரவியது. மேலும் இந்த தடுப்பூசிகள் பல பின் விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்றும், இது முறையாக ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானியின் கொலை பெரும் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது.
கொலை செய்யப்பட்ட ஆண்ட்ரே போடிகோவ் சிறந்த 2021 ம் ஆண்டு விஞ்ஞானிக்கான விருது பெற்றார். ஜூலை 2002 முதல் நவம்பர் 2014 வரை ரஷ்ய மாநில வைரஸ்கள் DI இவனோவ்ஸ்கி இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றினார்.
தொடர்ந்து 2014 இல் N. F. கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக சேர்ந்தார். தடுப்பூசியில் அவர் செய்த பணிக்காக அவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!