உலகம்
மூளையை உண்ணும் நுண்ணுயிரி.. அமெரிக்காவில் இளைஞர் பலி.. முகம் கழுவியபோது உடலுக்குள் நுழைந்த கிருமி !
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்டீவ் (வயது 26) என்பவருக்கு கடந்த சனிக்கிழமை அங்கு காலையில் இருந்தே காய்ச்சல் அடித்துள்ளது. அதோடு கடுமையான தலைவலியும் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்திய நிலையில், அதையும் பீட்டர் செய்துள்ளார். ஆனால் காய்ச்சல், தலைவலி அதிகரித்துக்கொண்டே சென்றதால் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அவரை மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அவருக்கு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவரின் மூளையில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருப்பதும், அவை மூளையை உணவாக உண்டுவருவதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பீட்டரிடம் விசாரணை நடத்தியபோது இறுதியாக முகத்தை வாஷ் பேஷினில் கழுவியதாகவும், அதன்பின்னரே தலைவலி வந்ததாகவும் கூறியுள்ளார். அப்போதுதான் அவரின் உடலில் இந்த நுண்ணுயிரிகள் நுழைந்து மூளையை அடைந்திருக்கும் என மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தனர்.
ஆனால், அவரின் மூளை கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பீட்டர் உயிரிழந்தார். மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் இந்த PAM அமீபா வகைகள் அபூர்வமாக ஏற்படும் நோய்தொற்றாகும்.
ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற சூடான நன்னீர் நீரில் வாழும் இந்த அமீபாக்கள் ஏரி, குளங்களில் குளிக்கும்போது இந்த அமீபா நம் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். பின் மூளையை அடைந்து அதன் செல்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.அமெரிக்காவில் 154 நோயாளிகள் மட்டுமே இந்த அமீபா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்றும், இது மனிதர்களிடமிருந்து பிறர்க்கு பரவாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!