உலகம்
கச்சா எண்ணெய் திருடும்போது ஏற்பட்ட வெடிவிபத்து.. 12 பேர் உடல் கருகி பலி: நைஜீரியாவில் கொடூரம்!
ஆப்பிரிக்காவின் முன்னணி எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் நைஜீரியா முக்கிய பங்கைக் கொடுத்து வருகிறது. இருப்பினும் இங்குக் கச்சா எண்ணெய் திருடும் தொழில் லாபகரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டா பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு தளத்தில் ஐந்து வாகனங்கள் கொண்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக எண்ணெய் திருடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கொழுந்துவிட்டுத் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால், எண்ணெய் திருடவந்த கும்பல் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை 12 பேர் வரை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் யார் என்று அடையாளம் காணாத அளவிற்கு உடல் தீயில் வெந்துள்ளது. மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காரணம் அதிகமானோர் எண்ணெய் சுத்திகரிப்பு தளத்திலிருந்ததை அவர்கள் பார்த்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
நைஜீரியாவில் இப்படி விபத்து நடைபெறுவது இதுமுதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த ஒருவருடத்தில் மட்டும் 3 பில்லியன் மதிப்பில் கச்சா எண்ணெய் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !