உலகம்

2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில் நடைபெற்ற பேஷன் ஷோ.. குவியும் பாராட்டு.. பின்னணி என்ன ?

புகழ் பெற்ற இத்தாலியின் பேஷன் ஷோ மிலான் நகரில் தற்போது நடந்து வருகிறது. 'டீசல்' என்னும் நிறுவனம் நடத்தும் இந்த பேஷன் ஷோவில் புகழ் பெற்ற கலைஞர்களின் ஆடை வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் பாலியல் நோய் பரவல் தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட ஒரு பேஷன் ஷோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சர்வதேச அளவில் பாலியல் நோய் பரவல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ,சுமார் 2 லட்சம் ஆணுறை குவியலுக்கு மத்தியில் இந்த பேஷன் ஷோ அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இதில் புதிய வகை ஆடைகளை அணிந்து மாடல்கள் அணிவகுப்பு நடத்தினர்.

பாலியல் நோய் பரவல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான பாலியல் உறவை வலியுறுத்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அதோடு இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பான பாலியல் உறவு குறித்த விழிப்புணர்வும் நடத்தப்பட்டது.

பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாக தினம் 10 லட்சம் பேருக்கு பாலியல் சார்ந்த நோய்கள் பரவுவதாக அறிக்கைகள் கூறும்நிலையில், பாதுகாப்பான உறவு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்காக காண்டம் போன்ற பாதுகாப்பான பாலியல் கருவிகளை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இதற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அரசு, மற்றும் தனியார் சார்பில் நடந்து வருகின்றன.

இந்த பேஷன் ஷோவை நடந்தும் டீசல் நிறுவனமும், பாலியல் விழிப்புணர்வுக்காக தனது கடைகளில் இலவசமாக 3 லட்சம் காண்டம்களை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாகவும், 'பாதுகாப்பான உடலுறவு' என்ற தீம்மில் 2023 பனிக்கால பேஷன் ஷோவை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Also Read: தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஏற்காத காரணம் என்ன?-200 வருட வரலாற்றை கூறி காரணத்தை விளக்கிய வடஇந்திய YouTuber!