உலகம்
விமானநிலையத்தில் சுருண்டு விழுந்து விமான பணிப்பெண் உயிரிழப்பு .. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி காரணம் !
ஏர் அல்பேனியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று அல்பேனியாவில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் லண்டன் விமானநிலையத்துக்கு சென்றுகொண்டிருந்துள்ளது. இந்த விமானத்தில் கிரேட்டா டைர்மிஷி ( வயது 24 ) என்ற இளம்பெண் ஒருவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிவந்துள்ளார்.
இந்த விமானம் லண்டன் விமானநிலையத்தில் தரையிறங்கிய நிலையில், திடீரென விமான பணிப்பெண் கிரேட்டா டைர்மிஷி மயங்கி விழுந்துள்ளார். சக பணியாளர்கள் அவரை எழுப்ப முயன்ற நிலையில், அவரை எழுப்ப முடியாமல் இருந்துள்ளது. இதனால் அவசர உதவி எண்ணுக்கு பணியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன்படி வந்த அவசர கால பணியாளர்கள் கிரேட்டாவுக்கு முதலுதவி செய்துள்ளனர். ஆனால், கிரேட்டா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முதலில் இது மாரடைப்பால் அவர் உயிரிழந்லத்துள்ளார் என நினைத்து காவல் நிலையத்துக்கு இது தொடர்பாக தகவல் அளித்துள்ளனர். மேலும், கிரேட்டாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது கிரேட்டா உயிரிழந்ததற்கு காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. அதன்படி, கிரேட்டா உயிரிழந்தற்கு மாரடைப்பு காரணமில்லை என்பதும், ' வயது வந்தோருக்கான திடீர் இறப்பு நோய்'(sudden adult death syndrome) பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அரியவகை நோயான இது, பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின்னர்தான் தெரியவரும் என்றும், இங்கிலாந்தில் மட்டும் இந்நோயால் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய் காரணமாக சுமார் 4,000 பேர் உயிரிழக்கின்றனர் என்றும் கூறியுள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?